இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் லவ் அகர்வால், ஐ.சி.எம்.ஆர். அமைப்பின் தலைவர் ரமன் கங்காதர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தனர்.
அப்போது, பல மாநிலங்களில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் குறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, ஐ.சி.எம்.ஆர், கருவிகளின் தர ஆய்வுகள் மேற்கொண்டு அதன் நிலவரத்தை இரண்டு நாள்களில் அளிக்கவுள்ளது. அதுவரை அனைத்து மாநிலங்களும் இரண்டு நாள்களுக்கு ரேபிட் டெஸ்ட் கருவியை பயன்படுத்த வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தியுள்ளது.