தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐசிஐசிஐ-வீடியோகான் வழக்கு: சந்தா கோச்சாருக்கு அழைப்பாணை - ENFORCEMENT DIRECTORATE

டெல்லி: ஐசிஐசிஐ-வீடியோகான் பணமோசடி வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை, அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அலுவலர் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் அடுத்து வாரம் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

சந்தா கோச்சார்

By

Published : Apr 24, 2019, 11:43 AM IST

ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அலுவலர் சந்தா கோச்சார் இருந்தபோது, 2012ஆம் ஆண்டு, வீடியோகான் நிறுவனத்திற்கு அந்த வங்கி ரூ.3500 கோடி முறைகேடாக கடன் வழங்கியதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பாக, தற்போது அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில், வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சந்தா கோச்சாரை, மே மாதம் 3ஆம் தேதி, மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் தீபக்கின் சகோதரர் ராஜீவ் கோச்சார் ஆகியோர், ஏப்ரல் 30ஆம் தேதி, ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details