ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அலுலரான சந்தா கோச்சர் மீது பல்வேறு முறைகேடு, ஊழல் புகார்கள் எழுந்து பெரும் சர்ச்சைக்குள்ளானது. சந்தா கோச்சார் தனது பதவிக் காலத்தில் வீடியோகான் நிறுவனத்திற்கு முறைகேடான முறையில் கடன் வழங்கியதாகவும், வீடியோகான் நிறுவனம் மூலம் அவரது கணவர் தீபக் கோச்சர் நிறுவனத்திற்கு பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை மூலம் விவரங்கள் வெளியாகின.
சுமார் ஆயிரத்து 875 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், முறைகேடான பணப் பரிவர்த்தைனையில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டில் சந்தா கோச்சர் கணவர் தீபக் கோச்சரை டெல்லியில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.