காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள், டிசம்பர் 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, மாநில காங்கிரஸ் சார்பில் திரங்கா யாத்ரா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் 'செல்ஃபி வித் திரங்கா' என்ற பெயரில் பரப்புரை மேற்கொள்ளவும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெளியிட்ட அறிக்கையில், "இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 136ஆவது நிறுவன நாள், வரும் டிசம்பர் 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு, பிரதேஷ் (மாநில) காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநிலம் மற்றும் மாவட்ட தலைநகரில் நிகழ்ச்சிகளை நடத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில், கட்சி நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏ/எம்எல்சிக்கள் ஆகியோர் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.