தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் கடந்த மாதம் வன்முறை வெடித்தது. அதன்பின்னர் நடந்த கலவரத்தில் 54 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த வன்முறையின் போது உளவுப் பிரிவு அலுவலர் அங்கித் சர்மா என்பவரும் கொல்லப்பட்டார். அவரின் உடலில் 400 கத்திக் குத்து காயங்கள் இருந்ததாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் அங்கித் சர்மாவின் உடற்கூறாய்வு அறிக்கை இன்று வெளியாகி உள்ளது. அதில், “அவரது உடலில் 12 கத்தி குத்து காயங்கள் உள்பட 45 இடங்களில் காயங்கள் இருந்தன” என கூறப்பட்டுள்ளது. மேலும், “நுரையீரல் மற்றும் மூளையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.