மத்திய அமைச்சரவையில் புதிய செயலர்கள் நியமனம் - cabinet commitee
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு உள் துறை, நிதித் துறை உள்ளிட்ட சில துறைகளில் புதிய செயலர்களை நியமனம் செய்துள்ளது.
நாடாளுமன்றம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிய செயலர்களை பணியமர்த்த நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு அனுமதியளித்துள்ளது. அதன்படி, (அடைப்புக்குறிக்குள் பழைய பதவி)
- அஜய்குமார் பல்லா - உள் துறை சிறப்புப் பிரிவு அலுவலர் (மின் துறை செயலர்),
- அனுராதா மித்ரா - அலுவல் மொழித் துறை செயலர் (தொலைத்தொடர்புத் துறை செயலர்),
- சுபாஷ் சந்திர கார்க் - மின் துறை செயலர் (பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதித் துறை செயலர்),
- அட்டானு சக்ரவர்த்தி - பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் (முதலீடு மற்றும் பொது சொத்துகள் மேலாண்மை துறை செயலர்),
- அன்ஷு பிரகாஷ் - தொலைத் தொடர்பு, தகவல் தொடர்புத் துறை செயலர் (தொலைத் தொடர்பு, தகவல் தொடர்புத் துறை செயலர் கூடுதல் செயலர்)
- அனில்குமார் காச்சி - முதலீடு மற்றும் பொது சொத்துகள் மேலாண்மை, நிதித் துறை செயலர் (பணிநிலை),
- சுக்லா - நாடாளுமன்ற விவகாரங்கள் துறை செயலர் (பணிநிலை),
- வேணுகோபால சர்மா - தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு செயலர் உறுப்பினர் (பணிநிலை),
- குருபிரசாத் மெஹபத்ரா - தொழில் மேம்பாட்டுத் துறை, உள்நாட்டு வர்த்தகத் துறை செயலர் (விமான சேவை போக்குவரத்துத் துறை),
- ரவி கபூர் - ஜவுளித் துறை செயலர் (பணிநிலை),
- அதுல் சதுர்வேதி - கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை செயலர் (தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகம் கூடுதல் செயலர்),
- வகீலா - மருந்துகள் துறை செயலர் (பணிநிலை).
Last Updated : Jul 26, 2019, 10:23 AM IST