தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

யுபிஎஸ்சியில் தோல்வி - மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

டெல்லி: யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தோல்வியுற்ற காரணத்தால், இளைஞர் ஒருவர் மெட்ரோ ரயில் முன்பு குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்
மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

By

Published : Jan 20, 2020, 7:54 PM IST

ஐஏஎஸ் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் படித்து வந்த 23 வயது இளைஞர் ஒருவர், யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தோல்வியுற்ற காரணத்தால் மெட்ரோ ரயில் முன்பு குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை டிசிபி விக்ரம் போர்வாலுக்கு, கரோல் பாக் மெட்ரோ நிலையத்திலிருந்து ஒருவர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக காலை ஒரு அழைப்பு வந்தது. உடனடியாக காவல் துறையினர் அங்கு சென்றனர். அப்போது 23 வயது இளைஞர் ஒருவர் மெட்ரோ ரயில் முன்பு குதித்திருக்கிறார். ரயில் ஓட்டுநர் எமர்ஜென்சி பிரேக்கை அழுத்தியதால், சிறு காயங்களுடன் இளைஞர் உயிர் தப்பினார். காயங்கள் ஏற்பட்ட இளைஞரை முதலுதவிக்காக தீண்டயால் உபாத்யாய் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இளைஞரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர் பி.டெக் படிப்பை முடித்தவர் என்பதும், தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இளைஞரின் தந்தை தெலங்கானாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஐஏஎஸ் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் யுபிஎஸ்சி தேர்வுக்கு டெல்லியில் தங்கி படித்திருக்கிறார். இந்நிலையில் 2019ஆம் ஆண்டுக்கான தேர்வில் தோல்வியுற்றதால், தற்கொலை செய்ய முயன்றுள்ளார் என தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரின் வீட்டுக்கு தகவல் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details