தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சூலூரில் களமிறங்கும் இந்திய விமான படை! - இந்திய வான்படை

சென்னை: இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) மே 27ஆம் தேதி தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் நான்காவது தலைமுறை எல்.சி.ஏ தேஜாஸ் விமானத்துடன் பொருந்திய 18ஆம் எண் படைப்பிரிவை (No.18 Squadraon) இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

IAF's 18 Squadron
IAF's 18 Squadron

By

Published : May 26, 2020, 2:45 AM IST

இந்திய வான்படை அல்லது இந்திய விமானப் படை இந்தியப் பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கமாகும். இது இந்தியாவை எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாகக் கொண்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள சூலூரில் நான்காவது தலைமுறை எல்.சி.ஏ தேஜாஸ் விமானத்துடன் பொருந்திய18ஆம் எண் படைப்பிரிவை (No.18 Squadraon) இயக்கவுள்ளதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.

1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்த படை தீவிரமாக பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாடாளுமன்ற கூட்டுத்தொடர் குறித்து வெங்கையா நாயுடு ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details