தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய இறையாண்மையை காக்க தயார் நிலையில் விமானப்படை - ஆர்.கே.எஸ் பந்தௌரியா - இந்திய விமானப் படை தினம்

டெல்லி: இந்திய இறையாண்மையை பாதுகாக்க விமானப்படை தயார் நிலையில் உள்ளதாக விமானப் படைத் தலைவர் ஆர்.கே.எஸ் பந்தௌரியா தெரிவித்துள்ளார்.

RKS Bhadauria
RKS Bhadauria

By

Published : Oct 8, 2020, 12:49 PM IST

இந்திய விமானப்படை தினம் இன்று(அக்.8) கொண்டாடப்படும் நிலையில், டெல்லி காசியாபாத் அருகே உள்ள விமானப் படை தளத்தில் விமானப் படை வீரர்களின் சாகச அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பை முப்படைத் தளபதி பிபின் ராவத் தலைமைத் தாங்கி ஏற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் விமானப்படைத் தளபதி ஆர்.கே.எஸ் பந்தௌரியா பேசுகையில், “இந்திய விமானப்படை சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. எந்தவொரு சூழலிலும் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க விமானப்படையினர் தயாராக உள்ளனர்.

89ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்திய விமானப்படை பல்துறை செயல்பாடுகளில் தற்போது சிறப்பான பயிற்சி பெற்றுவருகிறது. நாட்டின் வடக்கு எல்லையில் அச்சுறுத்தலான சூழல் தற்போது நிலவருகிறது. எந்தவித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள இந்திய விமானப்படை வீரர்களும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை மேற்கொள்ள ராணுவமும் முழு பலத்தோடு உள்ளது எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பிபின் ராவத், பந்தௌரியாவுடன், ராணுவத் தளபதி முகுந்த் நரவனே, கடற்படைத் தளபதி கரம்பீர் சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:கோவிட்-19 : இந்தியாவில் 68 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details