இந்திய - ரஷ்ய கூட்டுத் தயாரிப்பான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை.
இந்நிலையில், விமானங்களில் இருந்து ஏவக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணை சோதனையை நேற்று (அக்.30) இந்திய விமானப் படை வெற்றிகரமாக நடத்தியது. அதன்படி, Su-30 MKI போர் விமானத்தில் பிரம்மோஸ் ஏவுகணை எடுத்துச் செல்லப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இந்த பிரம்மோஸ் ஏவுகணை செலுத்தப்பட்டது. பல நூறு கிலோமீட்டருக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாழடைந்த கப்பலை மிகத் துல்லியமாக பிரம்மோஸ் ஏவுகணை தாக்கியது.
இந்திய விமானப்படை முதன்முறையாக கடந்த ஆண்டு மே மாதம் பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்திருந்தது. பிரம்மோஸ் ஏவுகணையை எடுத்துச் செல்லும் வகையில் தற்போதுவரை 40 சுகோய்-30 போர் விமானங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் இரண்டாம்கட்ட சோதனை வெற்றி