88ஆவது இந்திய விமானப் படை தினத்தை முன்னிட்டு ஸ்கை டைவிங் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 17 ஆயிரத்து 982 அடி உயரத்தில் இருந்து இந்திய விமானப் படையைச் சேர்ந்த விங் கமேண்டர் கஜானந்த் யாதவா, வாரண்ட் அலுவலர் ஏகே டிவாரி ஆகிய இருவரும் ஸ்கை டைவிங் செய்து சாதனைப் படைத்துள்ளனர்.
ஸ்கை டைவிங்கில் புதிய சாதனை படைத்த இந்திய விமானப் படை! - ஸ்கை டைவிங்
டெல்லி : 17 ஆயிரத்து 982 அடியிலிருந்து ஸ்கை டைவிங் செய்து தரையிறங்கி இந்திய விமானப் படையினர் சாதனை படைத்துள்ளனர்.
இது குறித்து இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''குறைந்த அளவிலான ஆக்சிஜன், குறைந்த காற்று அடர்த்தி, மலைகள் சூழந்த பகுதி இவற்றுக்கு மத்தியில் தரையிறங்குவது மிகவும் சவாலான விஷயம். இந்திய விமானப் படை வீரர்களின் திறன், குழு மனப்பான்மை, உடல் மற்றும் மனரீதியான பலம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இத்தகைய சவாலான சாகச நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்கும் 'சைக்கிள் 4 சேஞ்ச்' திட்டம்!