தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாகாலாந்து காட்டுத்தீயை அணைக்கும் பணி மீண்டும் தொடக்கம் - Continuation of Operations Dzukou Valley to Douse Wild fire

நாகாலாந்து பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளதாக, இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.

நாகாலாந்தில் காட்டுத்தீ பரவல்
நாகாலாந்தில் காட்டுத்தீ பரவல்

By

Published : Jan 3, 2021, 1:11 PM IST

கொகிமா:நாகாலாந்து, மணிப்பூர் எல்லையில் அமைந்துள்ள இட்சூக்கோ பள்ளத்தாக்கில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் பிரபல மலையேற்றப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி வருவதாக மணிப்பூர் நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வீரர்கள் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்திய விமானப் படையின் நான்கு எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது காட்டுத்தீ பரவி வரும் பகுதிக்கு மேல, இந்த ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தண்ணீர் தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி புரிந்துள்ளதாக, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இயக்குநர் சத்யா பிரதான் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மணிப்பூர் முதலமைச்சரை தொடர்புகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.

இதையும் படிங்க:நாகாலாந்து பள்ளத்தாக்கில் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details