பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்திய விமானப் படையின் மிக்-29 வகை விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது.
விமானத்தை கட்டுப்படுத்த முடியாத விமானி, விமானத்திலிருந்து குதித்ததால் சில காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து இந்திய விமானப்படை விசாரணை மேற்கொண்டுவருகிறது.