தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 27, 2020, 4:34 PM IST

ETV Bharat / bharat

சூலூர் விமான படைப்பிரிவில் சேர்க்கப்பட்ட தேஜஸ் விமானம்

கோவை: ஒளிக்கு இணையான வேகத்துடன் பறக்கக்கூடிய நான்காம் தலைமுறை அதிநவீன தேஜஸ் விமானம் சூலூர் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டது.

iaf-chief-flies-tejas-second-lca-squadron-operationalised
iaf-chief-flies-tejas-second-lca-squadron-operationalised

இந்திய விமான படையின் 18ஆவது ஸ்குவாட்ரான் படைப்பிரிவு 1965ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1971ஆம் ஆண்டு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போரில் தீவிரமாகச் செயல்பட்டதன் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் பாதுகாப்பாளர்கள் என அழைக்கப்பட்டுவருகிறது.

தேஜஸ் விமானம்

ஏப்ரல் 1ஆம் தேதி கோவை மாவட்டத்தின் சூலூரில் உள்ள விமான தளத்தில் ஸ்குவாட்ரான் பிரிவு தொடங்கப்பட்டது. இந்நிலையில் நான்காம் தலைமுறையான அதிநவீன தேஜஸ் போர் விமானம் சூலூர் விமானப் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

சூலூர் விமான படைப்பிரிவில் சேர்க்கப்பட்ட தேஜஸ் விமானம்

இதனை விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதௌரியா தொடங்கிவைத்து, தேஜஸ் விமானத்தில் பறந்தார். இந்த நான்காம் தலைமுறை குறைந்த எடைகொண்ட தேஜஸ் விமானத்தை வானியல் வளர்ச்சி முகமையுடன் (Aeronautical Development Agency) இணைந்து ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதையும் படிங்க:சீனாவின் சீண்டல்...! எல்லையில் படைகளை குவிக்கும் இந்திய ராணுவம்

ABOUT THE AUTHOR

...view details