தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஓடுபாதையைக் கடந்து ஓடிய இந்திய விமானப்படையின் விமானம்! - விமான நிலையம்

மும்பை: மும்பை விமான நிலையத்தில் இந்திய விமானப்படையின் ஏஎன் 32 விமானம் ஒன்று நேற்று இரவு ஓடுபாதையைக் கடந்து ஓடியதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பையில் ஓடுபாதையை கடந்த ஓடிய இந்திய விமானப்படையின் விமானம்

By

Published : May 8, 2019, 12:52 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமானப்படைத் தளத்திற்குச் செல்ல, இந்திய விமானப்படையின் ஏஎன் 32 ரக விமானம் ஒன்று நேற்று இரவு புறப்பட்டது.

அப்போது, எதிர்பாராத விதமாக விமானம் ஓடுபாதையைக் கடந்துச் சென்றது. இதையடுத்து, அங்கு ஓடுபாதை மூடப்பட்டு, மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details