தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

என் அப்பாவை விட சிறப்பாக பணியாற்ற முயற்சிப்பேன் - ஜெகன் மோகன் - முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி

குண்டூர்: ஆந்திர மாநிலத்தில் தனது தந்தை செய்த ஆட்சியை விட சிறப்பான ஆட்சியை தருவதற்கு தான் முயற்சிப்பேன் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

jegan

By

Published : Jun 4, 2019, 8:30 AM IST

ஆந்திர மாநிலம் குண்டூரில் இஸ்லாமியர்கள் ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களின் அழைப்பை ஏற்று அதில் கலந்துகொண்ட ஜெகன் மோகன் ரெட்டி இஸ்லாமியர்களுடன் இணைந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு பின்னர் அவர்களுடன் இணைந்து உணவு அருந்தினார்.

பின்னர் பேசிய அவர், 'இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இறைவன் பல அழகான கதைகளை எழுதுவார். அதற்கு எடுத்துக்காட்டாக நான் ஒரு கதை கூறுகிறேன்.

2014ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 67 இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால் தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சூழ்ச்சி செய்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 எம்.எல்.ஏ.க்களையும், 9 எம்.பி.க்களையும் விலைக்கு வாங்கினார்.

ஆனால் இந்த வருடம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 இடங்களையும், மக்களவைத் தேர்தலில் 9 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இறைவன் இயற்றிய இந்த கதையை விட யாராலும் சிறந்த கதையை எழுத முடியாது' என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தான் தனது தந்தையை போன்று ஆந்திர மாநிலத்திற்கு சிறந்த ஆட்சியை வழங்க முயற்சிப்பதாக தெரிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி ஆந்திர அரசியலில் மிகப்பெரிய வரலாறு படைத்தது.

ABOUT THE AUTHOR

...view details