தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘என் வேட்பாளர்களைத் திரும்பப் பெறுவேன்’ - மம்தா ஆவேசம்! - i will withdraw all candidates if allegations proved right

கொல்கத்தா: நிலக்கரி மாஃபியாவில் எங்கள் பங்கு இருப்பது நிரூபணமானால் என் கட்சி சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் திரும்பப் பெறுவேன் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

மம்தா

By

Published : May 9, 2019, 6:16 PM IST

மேற்குவங்க அரசியல் நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் வார்த்தைப்போர் வெடித்துள்ளது. கொல்கத்தாவில் நடந்தத் தேர்தல் பரப்புரையில் பேசிய மோடி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் நிலக்கரி மாஃபியாவில் ஈடுபட்டுள்ளார்கள் என குற்றம்சாட்டினார்.

மோடியின் இந்தப் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பன்குராவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, “என் கட்சியில் இருக்கும் ஒரே ஒருவர் நிலக்கரி மாஃபியாவில் ஈடுபடுவதை நிரூபித்தால் மேற்கு வங்கத்தில் என் கட்சி சார்பாக போட்டியிடும் 42 வேட்பாளர்களையும் திரும்பப் பெறுவேன்” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details