தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'என் தந்தை கைது செய்யப்பட்டதற்கு ஜந்தர்மந்தரில் போராடுவேன்' - கார்த்தி சிதம்பரம் - ப. சிதம்பரம் கைது

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் என் தந்தை கைது செய்யப்பட்டதற்கு ஜந்தர்மந்தரில் போராடுவேன் என்று சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம்

By

Published : Aug 22, 2019, 11:57 AM IST

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை நேற்று இரவு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்தது.

இந்நிலையில் தற்போது டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் காவலில் இருக்கும் அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. விசாரணை முடிந்தபின் அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் டெல்லி வந்த சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், "ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐயின் கைது நடவடிக்கை என் தந்தைக்கு மட்டும் அல்ல; காங்கிரஸ் கட்சியைச் சேர்த்து குறிவைக்கும் செயலாகும். இதற்காக நான் ஜந்தர்மந்தரில் போராடுவேன்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details