தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வருமானவரித் துறை சோதனையில் சிக்கிய புலித்தோல்! - சிக்கிய புலித் தோல்

போபால்: மத்தியப்பிரதேச முதலமைச்சரின் உதவியாளர் வீட்டில் நேற்று வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் புலித்தோல் முதலியன சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமானவரித் துறை

By

Published : Apr 9, 2019, 4:38 PM IST

மத்தியப்பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் உதவியாளர் பிரவீன் காக்கர் வீட்டில் இரண்டு நாட்களாக வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இரண்டு நாட்களாக தேடியும் எந்தவிதமான ஆவணங்களோ, பணமோ, நகைகளோ சிக்கவில்லை என்றும், இந்தச் சோதனையானது அரசியல் நோக்கத்துடன் நடத்தப்பட்ட ஒன்று என்றும் பிரவீன் காக்கர் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் வருமானவரித் துறையினர் இன்று டெல்லியில் உள்ள காக்கரின் வீட்டிலும், கமல்நாத்தின் முன்னாள் ஆலோசகர் மிகலனியின் வீட்டிலும் திடீர் சோதனை நடத்தினர். இந்நிலையில் பிரவீன் காக்கரின் நெருங்கிய நண்பரான அஸ்வின் சர்மா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் புலித்தோல் ஒன்று சிக்கியதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தச் சோதனையின்போது பல லட்சம் மதிப்பிலான பணமும், ஆவணங்களும், விலையுயர்ந்த பொருட்களும் சிக்கியதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details