ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தல் மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே சமயம், தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா வழங்கப்படுவதை தவிர்க்க தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதசார்பற்ற ஜனதா தளக்கட்சியின் மூத்த தலைவரான தேவகவுடா மற்றும் அவரது மகனும், கர்நாடக முதலமைச்சருமான குமாரசாமிக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில்லா பஞ்சாயத்து தலைவர் நாகரத்தினசாமி மற்றும் சில்லா பரிஷத் பகுதியில் அமைந்துள்ள மதசார்பற்ற ஜனதா தள நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறையைச் சேர்ந்த 15 பேர் குழு தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.