கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இரண்டு பிரபல தொழில் குழுமங்கள் மார்பில்ஸ், ஸ்டீல், உணவு தானியங்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் செய்துவருகிறது. பல ஆயிரம் கோடி சொத்துகளை கொண்ட இக்குழுமங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகவும், வருவாயை மறைப்பதாகவும் வருமானவரித் துறைக்கு புகார்கள் வந்தன. அந்தப் புகார்களின் அடிப்படையில் வருமானவரித்துறையினர் அந்த இரண்டு குழுமத்துக்குச் சொந்தமான நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் நேற்று (டிசம்பர் 31) திடீர் சோதனை நடத்தினர்.
இரண்டு பிரபல தொழில் குழுமம் வரி ஏய்ப்பு... ரூ.170 கோடி சிக்கியது - வருமான வரித்துறை அதிரடி! - இரண்டு பிரபல குழுமம் வரி ஏய்ப்பு
டெல்லி: கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இரண்டு தொழில் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 170 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
income tax
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 கோடி ரொக்கம், ரூ.1.42 கோடி மதிப்பிலான நகைகள், என மொத்தம் 170 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை நடந்துவருகிறது. அனைத்து இடங்களிலும் சோதனை முடிந்த பிறகுதான் விரிவான தகவல்கள் தெரியவரும்.