தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்: எய்ம்ஸ் மருத்துவர்கள் - கரோனா

டெல்லி: கரோனா பாதிப்பு டெல்லியில் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, வீட்டை விட்டு யாரும் வெளியே செல்ல வேண்டாம் என எய்ம்ஸ் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.

வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்: எய்ம்ஸ் மருத்துவர்கள்
வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்: எய்ம்ஸ் மருத்துவர்கள்

By

Published : Mar 19, 2020, 3:29 PM IST

டெல்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் எய்ம்ஸ் மருத்துவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ‘உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம், எங்களுக்காக நீங்கள் வீட்டில் இருங்கள்’ என்ற வசனம் எழுதப்பட்ட போஸ்டரை ஏந்தியபடி ஒரு மருத்துவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தொடுதல் அல்லது அருகில் இருந்தாலே கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், முடிந்தவரை மருத்துவமனை வருவதை தவிர்த்து வீட்டில் இருக்கும்படி எய்ம்ஸ் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர். அவசர தேவை என்றால் மட்டும் மருத்துவமனையை நாட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க:கோவிட் 19: கோமியம் அருந்தி குமட்டல், வாந்தி - பாஜக உறுப்பினர் கைது!

ABOUT THE AUTHOR

...view details