மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரக்யா சிங் தாகூர். அண்மையில் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது குறுக்கீட்டு பேசிய பிரக்யா சிங், கோட்சே ஒரு தேசப் பக்தர் என்ற கருத்தை முன்வைத்தார். இதற்கு எதிர்கட்சிகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாஜக தலைவர்களும் பிரக்யா சிங் தாகூரின் பொறுப்பற்ற பேச்சை கண்டித்தனர்.
இதைக் கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரக்யா சிங் தாகூரை பயங்கரவாதி என விமர்சித்து ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், பிரக்யா சிங் தாகூர் மன்னிப்பு கோரி விட்டார், நீங்கள் தெரிவித்த கருத்தை திரும்ப பெற்றுக் கொள்வீர்களா? என கேள்வி எழுப்பினர்.