முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்குப் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அருண் ஜேட்லியின் மனைவிக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இரங்கல் கடிதம் எழுதியுள்ளார்.
கட்சி வேறுபாடின்றி நண்பர்களை பெற்றவர் ஜேட்லி - சோனியா புகழாரம் - கட்சி வேறுபாடின்றி நண்பர்களை ஈர்த்தவர் அருண் ஜேட்லி என சோனியா காந்தி கடிதம்
டெல்லி: கட்சி வேறுபாடின்றி நண்பர்களை ஈர்த்தவர் அருண் ஜேட்லி என சோனியா காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
Sonia Gandhi
அதில், "உங்களின் அன்புக்குரிய கணவர் இறந்த செய்தியை கேட்டு சோகத்தில் மூழ்கினேன். கொடூரமான நோயினை எதிர்த்து கடைசிவரை தைரியமாக போராடினார். கட்சி வேறுபாடின்றி நண்பர்களை ஈர்த்தவர் அருண் ஜேட்லி. நாட்டிற்கு பங்களிக்க வேண்டியது அதிகம் இருக்கும் நிலையில், அவர் மறைந்தது எனக்கு வருத்தமளிக்கிறது" என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.