தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜோதிராதித்யா சிந்தியாவுடன் நல்லுறவு தொடர்கிறது - திக் விஜய் சிங்!

டெல்லி: ஜோதிராதித்யா சிந்தியாவுடன் தமக்கு நல்லூறவு உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறினார்.

Digvijaya Singh  Srimant Jyotiraditya Scindia  Guna meeting  congress meeting  ஜோதிராதித்யா சிந்தியாவுடன் நல்லுறவு தொடர்கிறது: திக் விஜய் சிங்  I have very good relations with Scindia Ji: Digvijaya Singh
I have very good relations with Scindia Ji: Digvijaya Singh

By

Published : Feb 24, 2020, 11:33 PM IST

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கமல்நாத்துக்கு எதிராக அவ்வப்போது ஜோதிராதித்யா சிந்தியா குரல் எழுப்பிவருகிறார். இதனால் உட்கட்சி பிரச்னை நிலவிவருகிறது.

இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கும், ஜோதிராதித்யா சிந்தியாவும் ஒருவருக்கொருவர் சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பு, மத்தியப்பிரதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது குறித்து திக் விஜய் சிங், ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “ஜோதிராதித்யா சிந்தியாவுடன் தமக்கு நல்லூறவு உள்ளது என்றார். அவர் மேலும் கூறுகையில், “தனது வருகை முற்றிலும் தனிப்பட்ட முறையிலானது. இதில் அரசியல் எதுவும் இல்லை.

மேலும் ஜோதிராதித்யா சிந்தியா யாருக்கும் எதிரானவர் அல்ல. மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் கட்சி ஒன்றாக உள்ளது“ என்றார்.

இதையும் படிங்க:'கருத்து வேறுபாடு ஜனநாயகத்தின் அங்கம், தேச விரோத செயல் கூடாது'- வெங்கையா நாயுடு

ABOUT THE AUTHOR

...view details