ஸ்ரீநகர் (ஜம்மு & காஷ்மீர்):ஜம்மு & காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் மாநில அங்கீகார சர்ச்சை தகவல் குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், "நான் மாநில அங்கீகாரத்தைத் திரும்பப்பெறும் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை என்றும் தவறான கருத்துக்களை பரப்பிவரும் செய்தியாளர்களுக்கும், விமர்சகர்களுக்கும் எனது கண்டனத்தை பதிவுசெய்து கொள்கிறேன்.
கூறாத ஒரு காரியத்தை விவாதித்து, அதன் மூலம் பிரச்னைகளை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்துவது சரியானதாக இருக்காது. நான் கூறியதெல்லாம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து விட்டு, ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்தின் சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதுதான். இதை விடக் கூடுதலாகவும் ஒன்றும் இல்லை. இதற்கும் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அங்கீகாரம் கோருவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்றார்.
சச்சின் நடவடிக்கைக்கும் என்னுடைய விடுதலைக்கும் தொடர்பு இருக்கிறதா? - கொந்தளிக்கும் உமர் அப்துல்லா
வெறுப்பவர்கள் வெறுப்பை உமிழ்ந்துகொண்டு தான் இருப்பார்கள். அதில் எந்த ஒரு மாற்றமும் நிகழபோவது இல்லை. சிலராவது சரியாக நடந்து கொள்வர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அரசியலில் ஏமாற்றங்கள் என்பது ஒரு பகுதி. அதை ஏற்றுக் கொண்டு வாழப் பழக வேண்டும்" என்று ட்விட்டர் பதிவில் தெளிவுப்படுத்தியுள்ளார்.