சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததாகக் கூறி ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்கள் மேல் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில், ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு மறுக்கப்பட்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டார். சிதம்பரத்திடம் 15 நாட்கள் தொடர் விசாரணை நடத்திய சிபிஐ இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியது.
”நாட்டின் பொருளாதாரம்தான் கவலையளிக்கிறது” - ப.சிதம்பரத்தின் அசால்ட் பதில்! - p chidambaram tells about indian economy
டெல்லி: நாட்டின் பொருளாதாரம்தான் கவலையளிக்கிறது என சிறைக்குச் செல்லும் முன் சிதம்பரம் கூறினார்.
இதுதொடர்பாக விசாரித்த நீதிபதி, திகார் சிறையில் அடைத்து விசாரணை செய்வதற்கு கொடுக்கப்பட்ட சிபிஐயின் மனுவுக்கு அனுமதியளித்து நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். திகார் சிறைக்குச் செல்லும் முன் சிதம்பரத்திடம், சிறைக்குச் செல்வது கவலையளிக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், “நாட்டின் பொருளாதாரம்தான் கவலை அளிக்கிறது” எனக் கூறினார். திகார் சிறையில் சிறை எண் 9இல் சிதம்பரம் அடைக்கப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்கப் போகும் சிதம்பரம் தனது 74ஆவது பிறந்தநாளில் (செப். 16) சிறையிலேயே இருப்பார்.