ராணுவப் பயன்பாட்டிற்காக இஸ்ரோவால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கார்டோசாட்-3 செயற்கைக்கோளையும், அமெரிக்க நாட்டினுடைய 13 நானோ வகை செயற்கைக்கோள்களையும் தாங்கிய பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் இன்று காலை 9:28 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பின்னர், கார்டோசாட் சி-3 செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், '' பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக 14 செயற்கைக்கோள்களும் புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது மகிழ்சியளிக்கிறது. இந்தக் கடினமான பணியையும் நாம் செய்து வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு உழைத்த அனைத்து சக பணியாளர்களுக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 6 ராக்கெட்கள், 7 செயற்கைக்கோள்கள் என மொத்தம் 13 திட்டங்கள் இஸ்ரோ வசம் உள்ளன '' என்றார்.