தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா வாரியர்ஸ்க்கு மரியாதை செலுத்திய சிவராஜ் சிங் சவுகான் - மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான்

போபால்: கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் கரோனா வாரியர்ஸ்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

i-am-fine-shivraj-salutes-corona-warriors-for-their-services
i-am-fine-shivraj-salutes-corona-warriors-for-their-services

By

Published : Jul 26, 2020, 3:34 PM IST

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், நேற்று முன்தினம் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக சிராயு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நான் நன்றாக இருக்கிறேன். கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பாடுபடும் கரோனா வாரியர்ஸ்களின் சேவைகளுக்கு வணங்குகிறேன்.

கரோனா வைரஸின் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் சுகாதார அலுவலர்களிடம் தெரிவிக்குமாறு கோரிக்கைவிடுக்கிறேன். கரோனா வைரஸைக் கண்டு அச்சப்படுவதற்கு பதிலாக, முழு நம்பிக்கையுடன் போராட வேண்டும்.

தகுந்த இடைவெளி, கைகளை கழுவுதல், முகக்கவசங்கள் அணிதல் ஆகியவை கரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாப்பதற்கான மிகப்பெரிய ஆயுதங்கள். உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்த அறுவுறுத்துங்கள்.

அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details