நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியிலுள்ள ஐதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சு வார்த்தையின்போது இருநாட்டின் பாதுகாப்பு, கூட்டு வணிகம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பின்போது, இந்தியா மற்றும் இலங்கை நாட்டின் உயர் அலுவலர்கள்உடனிருந்தனர்.
இந்த பேச்சுவார்த்தையில், பிரதமர் மோடி, இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை அந்நாட்டு அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்றும், ஒருங்கிணைந்த இலங்கையில் அவர்களுக்கு சம வாய்ப்புகளையும், நீதியினையும், அமைதியையும் அந்நாட்டு அரசு வழங்கும் என நம்புகிறேன் என தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.