தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 6, 2020, 11:23 PM IST

ETV Bharat / bharat

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், அதிசயமா! ஆபத்தா? ஆராய்ச்சியாளர்கள் பகீர் தகவல்!

டெல்லி: ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து அதிசயம் அல்ல, ஆபத்தாக கூட இருக்கலாம் என்று மருத்துவ ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன.

COVID-19 drug  coronavirus  COVID-19  hydroxychloroquine  HCQ  hydroxychloroquine can be fatal  AIIMS  Sher-i-Kashmir institute  ஹைட்ராக்ஸி குளோரோகுயின், அதிசயமா! ஆபத்தா? ஆராய்ச்சியாளர்கள் பகீர் தகவல்  ஹைட்ராக்ஸி குளோரோகுயின்  மலேரியா தடுப்பு மருந்து  கரோனா பாதிப்பு, கோவிட்-19 சிகிச்சை
COVID-19 drug coronavirus COVID-19 hydroxychloroquine HCQ hydroxychloroquine can be fatal AIIMS Sher-i-Kashmir institute ஹைட்ராக்ஸி குளோரோகுயின், அதிசயமா! ஆபத்தா? ஆராய்ச்சியாளர்கள் பகீர் தகவல் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மலேரியா தடுப்பு மருந்து கரோனா பாதிப்பு, கோவிட்-19 சிகிச்சை

புதிய கரோனா வைரஸால் உண்டான கோவிட்-19 பெருந்தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தின் திறனை உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஆராய்ந்து வருகின்றன. அதன்படி, பல வல்லுநர்கள் இது ஒரு அதிசய மருந்து அல்ல என்றும்; சில சந்தர்ப்பங்களில் ஆபத்தானதாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுகின்றனர்.

கோவிட்-19 பெருந்தொற்று நோயைக் குணப்படுத்தும் தடுப்பூசியை கண்டுபிடிக்க மருத்துவ ஆராய்ச்சியில் அதிதீவிரம் காட்டிவருகின்றனர். இதற்கு மத்தியில் கோவிட்-19 பாதிப்பாளர்களுக்கு அவசர மருந்தாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருந்து தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துவருகிறது.

இதற்கிடையில், 'ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து மீதான நம்பகத்தன்மை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த மருந்து கோவிட்-19க்கு சிகிச்சையளிப்பதில் நன்மை பயக்கும் என்பதை நிரூபிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை' என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன (எய்ம்ஸ்) மருத்துவரும் இந்தியாவின் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவருமான எம்.சி. மிஸ்லா, 'இந்த மருந்தின் பயன்கள் குறித்து திட்டவட்டமாக அறிக்கை கிடைக்கவில்லை.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் காரணமாக சில நோயாளிகளுக்கு இதய பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் வந்துள்ளன. இது மரணத்தை ஏற்படுத்தும்' என்றும் எச்சரிக்கை விடுத்தார். உலகளவில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (HCQ) மருந்தால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பொட்டாசியத்தை தடுக்கிறது. இதனால் இதய ஓட்டம் நிறுத்தப்பட்டு மரணம் நிகழ வாய்ப்புள்ளது. இது முக்கிய ஆய்வுகளிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக சிகிச்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் பயன்படுத்துகின்றன. இந்த மருந்தை கைப்பற்ற இந்நாடுகள் மிகப்பெரிய அளவிலான ஆர்டர்களை அளித்துள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கோவிட்-19க்கு ஒரு திட்டவட்டமான சிகிச்சை என்று கூறியுள்ளார். ஆனால், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இதன் பக்க விளைவுகள் குறித்து அறிக்கை அளித்துள்ளது. எனினும் ட்ரம்ப் நிர்வாகம் மில்லியன் கணக்கான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை சேமித்து வைத்துள்ளது.

இந்தியாவிலும், கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பல மருத்துவமனைகளால் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த நோயைக் கட்டுப்படுத்தும் என்ற அறிவியல் சான்றுகள் எதுவும் இதுவரை இல்லை. இது தொடர்பாக மிஸ்ரா கூறுகையில், 'நாங்கள் மற்ற மருந்துகளுக்கு மத்தியில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தையும் பயன்படுத்துகிறோம். ஆனால், அதன் தீவிர அபாயகரமான பக்க விளைவுகளை கவனத்தில் கொள்ளாமல் புறக்கணிக்கிறோம்.

ஏப்ரல் முதல் வாரத்தில், இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியபோது, ​​அஸ்ஸாமில் மருத்துவர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அதிகளவு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை உட்கொண்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மரணித்துவிட்டார்.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பொறுத்தவரை, பிரான்ஸ் ஆய்வறிக்கை கூறுவது போல் மீட்பும் விளைவுகளும் ஒரே மாதிரியானவை. 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதியன்று, தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் (The New England Journal of Medicine) சமர்ப்பிக்கப்பட்ட மற்றொரு ஆய்வில், சார்ஸ், கரோனா வைரஸ்-1 பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாச ஆதரவை அதிகரிப்பதற்கான தேவையுடன் தொடர்புடையது' என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரின் ஷேர்-ஐ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் கழகத்தின் உட்சுரப்பியல் பேராசிரியர் அஷ்ரப் கானி, 'கரோனா வைரஸுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு சிகிச்சையாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பரிந்துரைக்கப்பட்டது வெட்கக்கேடானது' என்று விவரித்தார். மேலும், 'ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கடுமையான இதய பக்க விளைவுகளை ஏற்படுத்தும். உரிய மருத்துவ வழிமுறை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது' என்றார்.

இதேபோல், ’கோவிட்-19 சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் முக்கிய பங்காற்றுகிறது என்ற தரமான விஞ்ஞானச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை’ என ஜெய்ப்பூரின் இந்திய சுகாதார மேலாண்மை ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தில் (IIHMR) சுகாதார அமைப்புகள் மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டி கே மங்கல் கூறினார்.

மேலும், ’கடுமையான இதய பிரச்னை கொண்ட நோயாளிகள், இந்த மருந்தை மிகுந்த முன்னெச்சரிக்கைவுடன் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் நச்சுத் தன்மைக்கு பெயர் பெற்றது. எனவே இது சுகாதார அமைப்புகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்’ என்றார்.

ஹரியானா, குர்கானிலுள்ள பராஸ் மருத்துவமனையின் உள் மருத்துவர் ராஜேஷ் குமார் கூறுகையில், 'நீரிழிவு நோயாளிகளுக்கு இது இரத்தச் சர்க்கரைக் குறைவு (hypoglycemia) பிரச்னையை ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஏற்படுத்தும்' என்றார்.

மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், கோவிட்-19 சிகிச்சைக்கு ஒரு வியக்கத்தக்க மருந்து அல்ல. அது எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டிய மருந்து. சீனாவின் ஹூபே மாகாணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கோவிட் -19, உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயிற்கு 2.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரை இழந்துள்ளனர். 36 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 'ஹைட்ராக்ஸி குளோரோகுயின்' குறித்து அறிவோம்!

ABOUT THE AUTHOR

...view details