இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெலங்கானா மாநிலத்தில் பணிபுரியும் சுகாதார துறை ஊழியர்களில் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோருக்கு சோதனை அடிப்படையில் மலேரியாவினை குணப்படுத்துவதற்காக வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வழங்கப்பட்டது. ஊழியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டோரிடம் நேரடி தொடர்பில் இருந்தபோதிலும் அவர்களுக்கு நோய் தொற்றின் அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. மேலும், கரோனா வைரஸிற்கு எதிரான நோய் எதிர்ப்பு தன்மையும் அதிகரித்திருந்தது தெரியவந்தது.
இந்த 394 சுகாதாரப் பணியாளர்களுக்கு வெவ்வேறு நேரங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இதற்காக 694 சுகாதாரப் பணியாளர்களின் மாதிரி தொகுப்பு தேர்வு செய்யப்பட்டு, அவை பரிசோதிக்கப்பட்டதாக செகந்திராபாத்தில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியின் மருத்துவத் தலைவர் விமலா தாமஸ் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வுக்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று இந்த மாதிரி தொகுப்பின் ஒரு விழுக்காடு ஹைட்ராக்ஸி குளோரோகுயினின் செயல்திறன் ஆய்வு மற்றொன்று சுகாதார ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகளின் (PPEகள்) திறன் ஆய்வு.