மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. ஆனால் சிலரோ தகராறு முற்றியதன் விளைவாக மாமியாரை, தாக்கவும் ஆரம்பித்துவிடுகின்றனர். அதுபோன்ற ஒரு கொடுமை சம்பவம் ஹைதராபாத் மாநிலம் ஹுமாயூன் நகரில் அரங்கேறியுள்ளது.
மாமியாரை தாக்கிய மருமகள் - வெளியான சிசிடிவி காட்சி - தெலுங்கானா செய்திகள்
தெலங்கானா: குடும்ப தகராறு காரணமாக மாமியாரை வீதியில் வைத்து மருமகள் அடித்து உதைத்த சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹுமாயூன் நகரில் வசித்து வரும் ஒரு பெண் தனது மாமியாரை, குடும்ப தகராறு காரணமாக அடிக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், மருமகள் தனது மாமியாரின் தலைமுடியைப் பிடித்து இழுத்துவந்து ரோட்டில், அடிக்கும் கொடூர காட்சி இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து சிசிடிவி காட்சியை அடிப்படையாக வைத்து அப்பெண்னை காவல் துறையினர் ஐபிசி 323, மற்றும் ஐபிசி 70 (b) ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக மாமியாரை, மருமகள் அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.