ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நவம்பர் 28ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவ சோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில் மற்றொரு பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேதத்தை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இரு சம்பவங்களுக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.