தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானா முதலமைச்சர் அலுவலகத்துக்குள் நுழைந்த திருப்தி தேசாய் கைது

ஹைதராபாத்: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பெண்கள் நல ஆர்வலர் திருப்தி தேசாயை காவலர்கள் கைது செய்தனர்.

Trupti Desai detained from outside Telangana CM’s residence
Trupti Desai detained from outside Telangana CM’s residence

By

Published : Dec 4, 2019, 3:24 PM IST

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் நான்கு பேரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு தீயிட்டு எரித்துக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீதான வழக்கை விரைந்து விசாரித்து அவர்களுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த நிலையில் பூமாதா அமைப்பின் நிறுவன தலைவரும் பெண் சமூக செயற்பாட்டாளருமான திருப்தி தேசாய், தெலங்கானா முதலமைச்சர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தார்.

தெலங்கானா முதலமைச்சர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற திருப்தி தேசாய் தடுத்து நிறுத்தப்பட்ட காட்சி
அவரை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர் கோஷ்மஹால் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். தெலங்கானா பெண் மருத்துவர் தொடர்பான வழக்கை, விரைவு நீதிமன்றத்துக்கு மாற்ற அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அவனுங்கள எங்ககிட்ட விடுங்க! - காயத்ரி ஆவேசம்

ABOUT THE AUTHOR

...view details