தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹைதராபாத்தில் ரயில் மோதி விபத்து: பத்து பேர் காயம்! - ஹைதராபாத்தில் ரயில் மோதி விபத்து

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் காச்சிகுடா அருகே இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில், பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹைதராபாத்தில் ரயில் மோதி விபத்து

By

Published : Nov 11, 2019, 12:55 PM IST

Updated : Nov 11, 2019, 1:26 PM IST

தெலங்கானா மாநிலம் காச்சிகுடா ரயில் நிலைத்திற்கு அருகே கர்னூலிருந்து வந்த இன்டர்சிட்டி ரயில் நடைமேடைக்காகக் காத்துக்கொண்டிருந்தது. அப்போது அதே வழியில் வந்த எம்.எம்.டி.எஸ். (ஹைதராபாத் பல்நோக்கு மாதிரி போக்குவரத்து திட்டம்) எனப்படும் லோக்கல் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுமார் பத்து பயணிகளுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் ரயில் மோதி விபத்து

தென்னக மத்திய ரயில்வே துறையின் தவறான சமிஞ்கையால், இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Last Updated : Nov 11, 2019, 1:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details