தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’எம்எம்டிஎஸ்’ ரயில் சேவை தொடங்கி 16 ஆண்டுகள் நிறைவு - service

ஐதராபாத்: எம்எம்டிஎஸ் ரயில்வே சேவை இன்றுடன் தனது 16 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

எம்எம்டிஎஸ்

By

Published : Aug 9, 2019, 1:16 PM IST

ஆந்திர பிரதேசம் ஒருங்கிணைந்து இருந்தபோது, மக்களின் பொதுநலன் கருதி ஐதராபாத்தின் நகர் பகுதிகளுக்கும், புறநகர் பகுதிகளுக்கும் எம்எம்டிஎஸ் என்ற ரயில்வே சேவை தொடங்கப்பட்டது. நாட்டிலேயே முதன்முறையாக மாநில அரசும், தெற்கு ரயில்வேயும் இணைந்து தொடங்கிய ரயில்வே சேவை இதுவே ஆகும்.

கடந்த 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி எம்எம்டிஎஸ் ரயில்வே சேவையைக் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்

அப்போது இருந்த ஒருங்கிணைந்த ஆந்திராவில் ‘ஆர்டிசி’ பேருந்துகளையே மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால், எம்எம்டிஎஸ் ரயில் சேவை பயணிகளுக்கு மிகவும் குறைந்த செலவில் இருந்ததாலும், போக்குவரத்து நெரிசலின்றி செல்லும் இடத்திற்கு விரைந்து செல்ல உதவியதாலும் பலரும் எம்எம்டிஎஸ் ரயில்வே சேவையை பயன்படுத்த தொடங்கினர்.

எம்எம்டிஎஸ் சேவை தொடங்கியபோது 29 கி.மீ. தொலைவிற்கு மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது எம்எம்டிஎஸ் தனது 16 ஆண்டுகால சேவையில் 50 கி.மீ தொலைவுக்கு ரயில்களை இயக்குகிறது.

நாள்தோறும் 1.65 லட்ச பயணிகள் எம்எம்டிஎஸ் ரயில்வே சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details