கரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியக் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டுள்ளதால், பலரும் மது இல்லாமல் தவித்துவருகின்றனர். பல மாநிலங்களில் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நேற்று சாலையில் உள்ள மக்களுக்கு இலவசமாக ஒரு கப் மதுபானம் வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " நான் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். அப்போது, ஒரு பெண் ஆல்கஹால் இல்லாத விரக்தியில் மன உளைச்சலுக்கு ஆளாகி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். பின்னர் அவரின் நிலைமை மோசமாகக் காணப்பட்டதால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.