தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பக்ரீத் பண்டிகை: ஹைதராபாத்தில் 130 கிலோ எடைகொண்ட ஆடு குர்பானிக்காக பலி - 130 கிலோ எடை குர்பானிக்காக பலி

ஹைதராபாத்: பால், பழம், தானியங்கள் கொடுத்து வளர்க்கப்பட்ட 130 கிலோ எடையிலான ஆடு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குர்பானிக்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் பலி கொடுக்கவுள்ளனர்.

Hyderabad family to sacrifice sheep weighing over 130 kg for Eid al-Adha
ஹைதராபாத்தில் குர்பானிக்காக பலியிடப்படவுள்ள 130 எடை ஆடு

By

Published : Jul 31, 2020, 10:37 AM IST

இது குறித்து அந்த ஆடு உரிமையாளர் முகமது சர்வார் கூறியதாவது:

"ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையின்போது ஆரோக்கியமாகவும், வலிமையுடன் இருக்கக் கூடிய விலங்குகளை கடவுளுக்கு படைப்பது வழக்கம். இவ்வாறு செய்வதை பல ஆண்டுகளாக எங்களது குடும்பத்தினர் கடைபிடித்து வருகின்றனர். அந்த வகையில், பியாரி முகமது என்ற பெயரில் நாங்கள் வளர்த்து வந்த ஆடு இந்தாண்டு பலி கொடுக்கப்படவுள்ளது.

ஆப்பிள், பால், உலர்ந்த பழங்கள், தானியங்கள் என மிகவும் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை கொடுத்து வளர்துள்ளோம். இதன் எடை 128 முதல் 131 கிலோ வரை இருக்கக் கூடும். நாள்தோறும் இரண்டு முறை நடைபயிற்சிக்கும் அழைத்துச் செல்வோம்.

தற்போது பியாரி முகமது இறைவனின் பெயரால் தனது உயிரை பக்ரீத் நாளில் தியாகம் செய்யவுள்ளான். எங்களது இந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, தற்போது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அனைவரையும் விடுபட உதவிபுரிவார் என நம்புகிறோம்" என்றார்.

ரூ.1.50 லட்சம் விலை மதிப்பு கொண்ட 'விலையாட்டி' என்ற இனத்தைச் சேர்ந்த இந்த ஆடு, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குர்பானிக்காக பலியிடப்படவுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகா வரை தொடரும் சீனர்களின் நம்பிக்கை!

ABOUT THE AUTHOR

...view details