ஐதராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். காவலரான இவர் இன்று ரத்த காயங்களுடன் வீட்டில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சொத்திற்காக காவலரை கொலை செய்த சித்தி - Hyderabad
ஐதராபாத்: சொத்திற்காக முதல் தாரத்தின் மகனை கொன்ற சித்தியை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

காவலர் கொலை
பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீகாந்தின் தந்தையான ஏடய்யாவிற்கு இரண்டு மனைவிகள். ஸ்ரீகாந்த் முதல் தாரத்தின் மகன் ஆவார்.
இதனால் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என பயந்து ஏடய்யாவின் இரண்டாவது மனைவியான சுகன்யா அவரை கொலை செய்து விட்டு தலைமறைவாகி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுகன்யாவை தேடிவருகின்றனர்.