தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பாலாபூர் காவல் நிலையத்தில் நரசிம்மா என்பவர் உதவி துணை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குச் சமீபத்தில் இடமாற்றம் குறித்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு அவர் உயர் அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், உயர் அலுவலர்கள் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.
காவல் அலுவலருக்கு பணியிட மாற்றத்தால் நேர்ந்த சோகம்! - Hyderabad Balapur ASI suicide Attempt
ஹைதராபாத்: காவல் அலுவலர் ஒருவர் பணியிட மாற்றத்தில் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக, காவல் நிலையம் அருகே வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![காவல் அலுவலருக்கு பணியிட மாற்றத்தால் நேர்ந்த சோகம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5148700-thumbnail-3x2-sisuicide.jpg)
இதையடுத்து, மனமுடைந்த நரசிம்மா, இன்று காவல் நிலையம் அருகே தண்ணீர் தொட்டியில் ஏறி, மண்ணெண்ணெய் ஊற்றி, தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார். இதனைக் கவனித்த அங்குள்ள பொதுமக்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கவே, அவர்கள் நரசிம்மாவை அருகில் உள்ள அப்பல்லோ டி.ஆர்.டி.ஓ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உதவி ஆய்வாளர் ஸைதுல் வேண்டுமென்றே தன்னை பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைத்ததாக நரசிம்மா குற்றஞ்சாட்டியுள்ளார். இதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.