தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெற்ற குழந்தையை 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தந்தை! - பெற்ற குழந்தையை விற்ற தந்தை

ஹைதராபாத்: தெலங்கானாவில் பெற்ற ஒருவயது பெண் குழந்தையை 70,000  ரூபாய்க்கு விற்பனை செய்த குடிகார தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

hyderabad
hyderabad

By

Published : Jan 1, 2021, 1:32 PM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் சதர்காட் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது ஒருவயது பெண் குழந்தையை நபர் ஒருவருக்கு நேற்று (டிச. 31) ரூ.70 ஆயிரத்திற்கு விற்றுள்ளார்.

கணவர் குழந்தையை விற்றதை அறிந்த தாய் காவல்‌நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கினர்.

இதனை அடுத்துக் காவல் துறையினர் குழந்தையை ஒரு நபரிடமிருந்து மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து குழந்தையின் தந்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையை விற்றதை ஒப்புக்கொண்டார். அவருக்கு மதுப் பழக்கம் உள்ளதாலும், குடும்ப வறுமையின் காரணமாகவும் குழந்ததையை விற்றதாகத் தெரிவித்தர்.

தந்தை மற்றும் குழந்தை விற்பனைக்குக் காரணமாக இருந்த நபர் மீது ஐபிசி பிரிவு 317, குழந்தைகள் பாதுகாப்பு சட்டப்பிரிவுகளான 80 மற்றும் 81இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details