தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 15, 2019, 2:26 PM IST

ETV Bharat / bharat

ஹரியானாவில் தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

பானிபட்: ஹரியானா மாநிலம் பானிபட்டில் தொழிலாளர்களின் போராட்டம் 20ஆவது நாளாக தொடர்கிறது.

H'yana: Workers protest against shutdown of industries in Panipat

ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியிலுள்ள பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நச்சு புகையை வெளியேற்றுமாறு அரசு அறிக்கை அளித்ததன் பேரில் இந்தத் தொழிற்சாலைகள் கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் மூடப்பட்டன.

இதனால் தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்துள்ளனர். அவர்களின் குடும்பம் பசியால் வாடுகிறது. இதையடுத்து அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் கடந்த 20 நாள்களாக தொடர்ந்து நடக்கிறது.

இது குறித்து தொழிலாளர் அவினாஷ் கார்க் கூறும்போது, “பானிபட் பகுதியிலுள்ள தொழிற்சாலைகள் மட்டும் மூடப்பட்டுள்ளன. கர்னல், சோனிபட் பகுதியிலுள்ள தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அவர்கள் டெல்லிக்கு மிக நெருக்கமாக உள்ளனர்.

கர்னல் முதலமைச்சரின் சொந்தத் தொகுதி. அவர்களால் எங்கள் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை. அடுத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

இதையும் படிங்க: பாஜக எம்எல்ஏவின் நேர்மையை மனதாரப் பாராட்டிய ராகுல்...!

ABOUT THE AUTHOR

...view details