தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அறிவழகன். இவரது மனைவி மஞ்சுளா புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இதனால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மனைவியைச் சேர்த்து சிகிச்சை அளிக்க அறிவழகன் எண்ணினார். இதற்கிடையே ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டதால் தமிழ்நாடு-புதுச்சேரி எல்லைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
எப்படியாவது தனது மனைவிக்கு சிகிச்சையளித்துவிட வேண்டும் என்ற தீர்க்கமான முடிவில் இருந்த அவர், தன் மனைவியை சைக்கிளில் ஏற்றி புதுச்சேரிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார். கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு எவ்வளவு கிலோமீட்டர் என்றுகூட தெரியாமல் மனைவியை சைக்கிளில் அமர்த்தி சைக்கிளை மிதித்திருக்கிறார் அறிவழகன். ஆயினும் சீர்காழி, கடலூர் வழியாக 120 கிமீ தூரம் கடந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.