உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், அம்ரோஹா பகுதியில் வசிக்கும் தனது தாயாரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அச்சமயத்தில், கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதால், அப்பெண்ணால் வீட்டிற்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கணவர் மனைவியை தொடர்புகொண்டு வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால் மனைவியோ, காவல்துறையினர் அனுமதி இல்லாமல் வர முடியாது எனத் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த கணவர், நான் அனுமதி கடிதம் வாங்கித் தரேன் நீ கிளம்பி வா என நச்சரித்துள்ளார். கரோனா அச்சம் இருப்பதால் நான் இங்கயே இருக்கிறேன் என மனைவி கூறியுள்ளார். மனைவியின் உறவினர் மூலம் சமாதானப் படுத்தி கூட்டிச்செல்ல கணவர் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடிந்தது.