கர்நாடக மாநிலம் நிலமங்களா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்ஷிப் உல்லா. இவரது மனைவி ஹீனா கவுசர். இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் இவரின் மனைவி சந்தேகத்திற்கிடமான வகையில் கொலைசெய்யப்பட்டார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. இது தொடர்பாக ஹீனாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இந்தப் புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஹீனாவின் கணவர் முன்ஷீப்பிடம் விசாரித்தபோது அவர் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார்.