தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மனைவியின் வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர் - சிசிடிவி வெளியீடு - pudhucherry CCTV

புதுச்சேரி: குடும்பத் தகராறு காரணமாக, மனைவியின் வாகனத்தை கணவரே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மனைவியின் வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்
மனைவியின் வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்

By

Published : Nov 15, 2020, 7:49 PM IST

புதுச்சேரியின் சஞ்சய் காந்தி நகர் தெய்வசிகாமணி வீதியைச் சேர்தவர் குமரேசன். அவரது மனைவி சுஜாதா, அழகு கலை நிபுணராகப் பணியாற்றி வருகிறார். குமரேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

மனைவியின் வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்


இந்த நிலையில் நேற்று (நவம்பர் 14) இரவு மதுபோதையில் வந்த குமரேசன், மனைவி வசித்து வரும் வீட்டின் சுவர் ஏறி குதித்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதனால் ஏற்பட்ட தீ, அருகே இருந்த மேலும் 2 வாகனங்களின் மீதும் பரவியதால், அனைத்து வாகனங்களும் முழுவதுமாக எரிந்து நாசமாகின. இது தொடர்பாக, மனைவி சுஜாதா உருளையன்பேட்டை காவல் துறையினரிடம் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, அவரது கணவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details