ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் உரவகொண்டா பைபாஸ் பகுதியில் கணவன், மனைவி இருவர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களது குழந்தை சிறு காயங்களுடன் உயிருடன் இருப்பதாகவும் அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயங்களுடன் தப்பிய ஒரு வயதுள்ள குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆந்திராவில் சாலை விபத்து; கர்ப்பிணி கணவருடன் உயிரிழப்பு - சாலை விபத்து
அமராவதி: அனந்தபூர் மாவட்டத்தில் நேற்று இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன், அவரின் ஆறு மாத கர்ப்பிணி மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
husband-and-wife-died-in-accident
அதையடுத்து காவல்துறையினரின் விசாரணையில் உயிரிழந்த தம்பதி கேசவ், வர்லி பாய் என்பதும் பல்லாரியிலிருந்து போடசனிபள்ளி தாண்டா நோக்கி இருசக்கர வாகனத்தில் அவர்கள் செல்லும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க:உதவி ஆய்வாளர் கார் மீது லாரி மோதி விபத்து - 5 பேர் காயம்