கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், தனது மனைவி, குழந்தைகளை ஜூன் 4ஆம் தேதி கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். பின்னர், நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவர், மனைவியை வற்புறுத்தி மது அருந்த வைத்தார். அதையடுத்து, குழந்தைகளின் கண் முன்னே கணவர் அவரது நண்பர்கள் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தனர்.
மனைவியை பாலியல் வன்புணர்வு செய்த கணவர் உள்பட 7 பேர் கைது! - கேரளாவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்புணர்வு செய்த கணவர் கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் மனைவியை வற்புறுத்தி மது அருந்த வைத்து நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்த கணவர் உள்ளிட்ட ஏழு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
மனைவியை பாலியல் வன்புணர்வு செய்த கணவர் கைது
இச்சம்பவம் குறித்து கணவர் உள்ளிட்ட ஏழு பேர் மீது காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், கணவர் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர்.