ஆந்திரப் பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பேடகுராபடு கிராமத்தில் வசித்து வந்த ஸ்ரீஜா என்ற பெண்ணின் பெற்றோர் இறந்து விடவே, மேற்கு கோதாவரி மாவட்டம் டெண்டுலூரில் உள்ள தனது அக்கா வீட்டிற்குச் செல்கிறார். அங்கு வசித்து வந்த ஸ்ரீஜாவின் வாழ்க்கையில் அப்போது பேரிடி வீழ்ந்துள்ளது.
அதில், ஸ்ரீஜாவின் அக்காவும், அக்கா கணவரும் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்து விடுகின்றனர். இதனால் அவர்களின் குழந்தையான தேஜ் சாயை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஸ்ரீஜாவின் மீது விழுகிறது.
இதனால் பிழைப்புத்தேடி எள்ளூர் செல்கிறார் ஸ்ரீஜா. அப்போது அந்த ஊரைச் சேர்ந்த புத்தா ரவி என்பவருக்கும், இவருக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.
சிறிது காலம் சந்தோஷமாக வாழ்கின்றனர். பின்னர் கொஞ்ச நாள்கள் கழித்து புத்தா ரவிக்கு வேறு பல பெண்களுடன் நெருக்கம் ஏற்படுகிறது. இதனால் தினமும் ஸ்ரீஜாவை புத்தா ரவி துன்புறுத்த ஆரம்பிக்கிறான். இதனிடையில் ஸ்ரீஜாவிற்கு ஒரு பெண் குழந்தைப் பிறக்கிறது.